திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டம், செங்கம் வட்டம், G.N.பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மனோகரன் 61 என்பவர், தான் செங்கம் அரசு மருத்துவமனையில் மலேரியா தொற்றுநோய் களப்பணியாளராக பணியாற்றி 30.04.2021 அன்று ஓய்வு பெற்றதாகவும், தன்னுடைய ஓய்வூதிய பணமான ரூபாய் மூன்று லட்சத்தை (Rs.3,00,000/-) கடந்த மாதம் 07.07.2021 அன்று செங்கம் SBI வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு செங்கம் அரசு மருத்துவமனையை நோக்கி நடந்த சென்று கொண்டிருந்ததாகவும்,
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முனியப்பன் கோயில் அருகில் பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டதாகவும்,
செங்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரினை அடுத்து, செங்கம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.சரவணகுமரன் அவர்களின் மேற்ப்பார்வையில்,
செங்கம் காவல் ஆய்வாளர் திரு.K.சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.M. சத்தியா நந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள், மேற்படி சம்பவம் நடந்த இடத்தில் இருந்த CCTV-காட்சிகளை ஆராய்ந்தும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையத்தின் உதவியுடன் விசாரனை மேற்க்கொண்டு வந்த நிலையில்,
நேற்று 04.08.2021 தேதி செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பாலத்தின் கீழ் மனோகரனிடம் வழிப்பறி செய்த எதிரிகள் 1)கோவிந்தராஜ் 38 ஓஜிகுப்பம், நகிரி வட்டம், சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம், 2) அங்கையா 18 த/பெ பாபு, ஓஜி குப்பம், நகிரி வட்டம், சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இருவரும் தங்கி இருப்பதாக, தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து விரைந்து சென்ற தனிப்படையினர் இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்து,
அரகளிடமிருந்து ரூபாய் 3,00,000/- பணம் மற்றும் பதிவெண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.













