திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலுகாபுரம் அருகே, (18.09.2024)-ஆம் தேதி, பழையபேட்டையை பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மனோஜ்(20). என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, டவுன் வயல் தெருவை சேர்ந்த தங்கதுரை, ஐயப்பன், சுத்தமல்லியைச் சேர்ந்த தங்கையா மகன் திருநாவுக்கரசு(20), டவுனை சேர்ந்த முகமதுஅமான் மகன் நாகூர் சலீம்(20). டவுன் மாதா தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் மகாராஜன்(20). ஆகியோர் மனோஜை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடுவதற்கு பணம் கேட்டு மிரட்டி அவர் பணம் தர மறுத்த காரணத்தினால் அவதூறு வார்த்தைகளால் பேசி, கொலை செய்யும் நோக்கத்துடன் அருவாளால் தாக்கியதில் காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனோஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டவுன் காவல் துறையினர் (19.09.2024)-ஆம் தேதி திருநாவுக்கரசு(20). நாகூர் சலீம்(20). மகாராஜன்(20). ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















