திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.D.குமார், அவர்களின் மேற்பார்வையில், கலசபாக்கம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு: கடலாடி காவல் நிலையம்) திரு.R.லட்சுமிபதி அவர்கள் தலைமையில் காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கலசபாக்கம் வட்டம், சிங்காரவாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32), என்பவர் சிங்காரவாடி கிராமத்தில் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடமிருந் து 200 கிராம் எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு, உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் மூலம் பங்க்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
















