திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி இவருக்கு கைப்பேசி செயலி மூலம் பகுதிநேர வேலை தொடர்பான விளம்பரம் வந்ததால் அதில் பதிவு செய்த அவரை மர்ம நபர்கள் சிலர் தொடர்புகொண்டு உணவகங்களுக்கு மதிப்பீடு அளிக்கும் வேலைகளை கொடுத்ததோடு அதற்கு சம்பளமாக சிறிய தொகையும் அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து அதிக தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என அவர்கள் கூறியதை உண்மையென நம்பிய அவா் ரூ.6.89,000ஐ பல தவணைகளாக அவர்கள் கூறிய வங்கிக்கணக்குக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அப்பணத்தை எடுக்க முயன்றபோது மேலும் அதிக தொகை கட்டவேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















