விருதுநகர்: விருதுநகர், திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச் பிளஸ் நிறுவனங்கள் இணைந்து இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் பரளச்சி யில் நடை பெற்றது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதுரை மண்டல உதவி பொது மேலாளர் . ரவீந்திரன் தலைமை வகித்தார். அமுல், ரிச்ப்ளஸ் நிறுவனங்களின் தலைவர் அசோக் சாரங்கன் முன்னிலை. வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயற்கை வேளாண்மை ஒருங்கிணைப்பாளர் . ஸ்ரீதர், முன்னோடி வங்கி மேலாளர், சீட்ஸ் நிர்வாக இயக்குநர் பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில், இயற்கை வேளாண்மையின் நன்மைகள், நிலையான விவசாயம், இயற்கை விளை பொருள்களுக்கு சந்தை வாய்ப்புகள், அமுல் மற்றும் ரிச்ப்ளஸின் இயற்கை சான்றிதழ், மதிப்புக்கூட்டுதல் மற்றும் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் வழிகள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டது.
மேலும், மக்களின் மனநிலை தற்போது இயற்கை விளைபொருட்களை விரும்பும் வகையில் மாறி வருவது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.இந்த முகாமில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயத்தில் நாட்டமுள்ள சுமார் 150 விவசாயிகள் கலந்துகொண்டு வல்லுநர்களிடம் கேள்விகள் எழுப்பி பயனடைந்தனர்.இம்முகாமில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலக முதன்மை மேலாளர் ரவி கிருஷ்ணமூர்த்தி, அருப்புக்கோட்டை கிளை மேலாளர் . அழகர்சாமி,அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி கிளைகளின் இந்தியன் , நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்கள் அனுஷா . எலிசபெத் அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமுக்கான ஏற்பாடுகளை, விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர். இரா. பாண்டிச்செல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி