திருவாரூர்: திருவாரூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் செல்வி. சந்தானமேரி மற்றும் காவலர்கள் சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனை செய்த போது ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த – . 1) வைகோ (எ) சரவணன் (30). த/பெ. கிருஷ்ணமூர்த்தி, பேபிடாக்கீஸ் ரோடு, திருவாரூர். 2) சசிகலா (39). க/பெ. தமிழரசன், பெரியமில் தெரு, திருவாரூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு மற்றும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.