கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டபள்ளி கிராமத்தில் ஜெகன் என்பவர் ஒரு எரிவாயு நிரப்பும் மையத்தை நடத்தி வருகிறார். (14.09.2025) ஆம் தேதி மாலை 03.30 மணியளவில் மதிய உணவிற்கு தனது கடைக்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது எரிவாயு நிரப்பும் மையம் உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர்களை யாரோ திருடி சென்றது தெரிய வந்துள்ளது. (15.09.2025)ஆம் தேதி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து 2 சிலிண்டர்களை திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.