சென்னை: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் கே.ராமு, காவலர் பரித்ராஜா, ஆயுதப்படை காவலர் ஜி.உதயன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் சி.வெங்கடேஷ் அவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியில், இரயில்வே கேட் அருகே சுற்றுக் காவல் ரோந்து பணியில் இருந்தபோது, 09.03.2021 அன்று அங்கு சந்தேகத்திற்கிடமாக, கத்தியுடன் சுற்றி திரிந்த 1.நாகூர் உசேன், வ/31, தண்டையார்பேட்டை, 2.சரவணன், வ/29, மீஞ்சூர், 3.உதயக்குமார், வ/31, பழைய வண்ணாரப்பேட்டை, 4.பார்த்திபன், வ/ 30, பழைய வண்ணாரப்பேட்டை, ஆகியோரை கைது செய்து ஆர்.கே.நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பெரோஸ்கான் என்பவரை கொலை செய்ய கத்தியுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தி கைப்பற்றப்பட்டது,மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (10.03.2021) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.















