தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதேபோல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த தெய்வத்திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி ரூ 3,00,000/- க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் வழங்கினார்.பின்பு இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் காவல்துறை எப்போதும் தங்கள் குடும்பத்திற்கு துணை நிற்கும் என்று ஆறுதல் வழங்கினார்..
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்















