திருநெல்வேலி: தமிழக முதல்வர் சட்டசபையில் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து (06.09.2025) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் , காவலர் தினமானது கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக, ஒருங்கிணைந்த ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் மாநகர காவல் துணை ஆணையர், மரு.V.பிரசன்னகுமார் இ.கா.ப, (மேற்கு) காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம், (கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) மற்றும் மாவட்ட , மாநகர காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், பணியின் போது தங்களது இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் பணிக்காக தங்களது உயிரினை இழந்தவர்களின் தியாகங்கள் பற்றியும், காவல் பணியின் சிறப்பு பற்றியும் விரிவாக பேசினார். தொடர்ந்து காவல்துறை பொதுமக்கள் நல்உறவு பலப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்