கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த தாளப்பள்ளி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் தன் வீட்டின் அருகில் ஆடுகளை வளர்த்து வருவதாகவும் (26.08.2025) ஆம் தேதி இரவு சுமார் 11.00 மணியளவில் 6 ஆடுகளை கட்டி வைத்ததாகவும் மறுநாள் (27.08.2025) ஆம் தேதி காலை சுமார் 05.00 மணிக்கு வந்து பார்த்தபோது 6ஆடுகளில் 2ஆடுகள் காணவில்லை என அருகில் இருந்தவர்களிடமும் கேட்டும் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை என மோகன்ராஜ் (03.09.2025)ஆம் தேதி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து 2ஆடுகளை திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.