சென்னை: சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி ஜெ.ஜெரினா பேகம் அவர்கள் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். புயல் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, கீழ்பாக்கம், வேப்பேரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால முகாம்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ரிப்பப்ளிக் கட்டுப்பாட்டு அறைகள் போன்றவற்றை அவர் பார்வையிட்டார். அதே நேரத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















