தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் கடந்த மாதம் செந்தில்முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் திருமலை குமார் என்ற பெரிய கட்டை (45). மற்றும் சுரண்டை காவல் நிலைய சரகத்தில் பாலியல் சீண்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுரண்டை சிவகுருநாதபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் வெனிஷ் குமார் (24). ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த், அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்