தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கருத்தப்பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் பிரைசன்(33). என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ் வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் குற்றவாளியான பிரைசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















