திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சாலையூரில் கடந்த 2020-ம் ஆண்டு மது போதையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அஜித்குமார்(25). என்பவரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் புறநகர் டிஎஸ்பி.சங்கர் மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜெயராஜ் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள், அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















