திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50). என்பவரை கொலை செய்த வழக்கில் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆரிஃப் ஜான் (40). என்பவரை கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு பழனியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் அரசு வழக்கறிஞர் சிவக்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் (10.09.2025) பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளியான ஆரிஃப் ஜான் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா