திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பை, வாகை குளத்தில் கடந்த 1999 ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, வயலில் தண்ணீர பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோகத்தில், கடந்த 2013-ம் ஆண்டு அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், சபரிமுத்து, பாக்யராஜ், விஜய் ஆகியோர் சேர்ந்து அதே ஊரைச் சார்ந்த செல்வராஜ் (32/13). என்பவரை முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் வைத்து கொலை செய்த வழக்கு திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளான கிருஷ்ணன் என்பவர் கடந்த வருடம் இறந்த நிலையில், மற்ற குற்றவாளிகளான சவரிமுத்து(37). பாகியராஜ்(40). விஜய் (31). (சரித்திர பதிவேடு குற்றவாளி) ஆகிய மூவருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், அபராதம் தலா ரூ. 10,000/-விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தில் இவ்வழக்கில் விரைவாக சாட்சிகளை ஆஜர்படுத்தி தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் அன்டோ ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளர், வேல்ராஜ் மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினரையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். மாவட்ட காவல்துறை மூலம் 2025 ஆம் ஆண்டில் மட்டும். இதுவரை 18 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 63 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 21 நபர்கள் சரித்திர பதிவேடு 20 குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்