திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சிலுவை அன்றோ அபினஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ் வழக்கு விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஐந்து குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து (01.09.2025) அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 16 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 50 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 19 நபர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் விரைவாக சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் மாவட்ட காவல்துறை தொடர்ந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்