மயிலாடுதுறை: சமூக வளைதளத்தில் (Face book) கழுக்காணிமுட்டம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் பாண்டி சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்து 50 பாக்கெட் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்டு சாராய வேட்டை நடத்திய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
















