திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை பகுதியில் கடந்த 2018- ம் ஆண்டு, மகாராஜன் (40). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற சின்னையாவை (42/18). கொலை செய்த வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மகாராஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிக்கு
ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதமும், விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில், திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், ஜீன்குமார் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), மற்றும் மானூர் காவல்துறையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
2025 ஆம் ஆண்டில் மட்டும். இதுவரை 17 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 60 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய நடவடிக்கைகள் மாவட்ட காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்