மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது.
இச் சாலை ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இச்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவசர தேவைகளுக்காக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வதால் பள்ளங்களில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு காயங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் நெடுஞ்சாலையில் குருவிளாம்பட்டி விலக்கில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் நெடுஞ் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி