திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் 30.07.2020 அன்று மாலை ஒரு பெண் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே வர அப்பெண் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அப்போது கண்ணமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.R.ஹேமாவதி தனது வாகனத்தில் அந்த வழியாக வந்த போது விபத்தில் சிக்கிய பெண்ணை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஒரு ஆட்டோவில் அப்பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னாலேயே காவல் ஆய்வாளர் திருமதி.R.ஹேமாவதியும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு விபத்துக்குள்ளான பெண்ணுக்குரிய சிகிச்சைகுரிய செலவை தானே ஏற்றுக்கொண்டு பெண்ணின் குடும்பத்தாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். கண்ணமங்கலம் காவல் ஆய்வாளரின் இந்த மனிதாபிமானத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.















