மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் வல்லத்தரசு, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் சமய செல்வம், துணைச் செயலாளர்கள் முருகேசன், பாண்டியன் ஆகியோர் வரவேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நியூல் தமிழ் தொலைக்காட்சி நிருபர் லோக
நாதன் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் பாபு மீது நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் புஷ்பராஜன் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை மாநில செய்தி தொடர்பாளர் அஜீத்
குமார் செய்து இருந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி