மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் உத்தரவின்படி, போக்குவரத்து துணை ஆணையர் வனிதா அவர்களது மேற்பார்வையில், மதுரை மாநகரம் முழுவதும் சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. அதன்படி, மதுரை சிம்மக்கல் போக்குவரத்து சிக்னல் அருகில் திலகர் திடல் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி தலைமையில் வாகனத்தின் முகப்பு விளக்குகளில். இரவு நேரங்களில் கண்கூசும் ஒளியை தவிர்க்கும் வகையில். வாகனங்களின் முகப்புகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் முறையாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களை பாராட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தலைக்கவசம் அணிவது குறித்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்
கொள்ளப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















