விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.பா., அவர்கள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் செவிலியர் தவறவிட்ட 10சவரன் நகையை கண்டெடுத்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்த விழுப்புரம் கிழ்வன்னியர் தெருவை சேர்ந்த டீ மாஸ்டர் விஜயகுமார் 45, என்பவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.














