இராணிப்பேட்டை: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பயணி குடும்பத்துடன் அரக்கோணம் இரயில்வே ஸ்டேஷன் வருகை தந்து இங்கிருந்து ஆட்டோ மூலம் சோளிங்கர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பி வந்து சென்னைக்கு சென்று விட்டார். அவர் பயணித்த ஆட்டோவில் கிடந்த சுமார் ஒரு சவரன் தங்க டாலரை ஆட்டோ டிரைவர் அன்வர் பாஷா உடனடியாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தவறவிட்ட பயணிக்கு என்பவருக்கு தகவல் கொடுத்து காவல் நிலையம் வரவழைத்து தங்க செயினில் இருந்து விழுந்த ஒரு சவரன் டாலர் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையான முறையில் தங்க டாலரை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பழனி பேட்டையைச் சேர்ந்த அன்வர் பாஷா (வ/60). அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் ஆய்வாளர் திரு.அசோகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
















