திருநெல்வேலி: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் திருவளன் தலைமையிலான போலீசார் சிதம்பரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் பாண்டியாபுரத்தைச் சேர்ந்த அசோக்(33),சிதம்பரபுரம் மேல ரதவீதியை சேர்ந்த செல்வராஜ் (32), மகேஷ் (51) ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.















