கன்னியாகுமரி: இரணியல் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கடந்த 20 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் நிமிர் குழுவினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவன் பள்ளிக்கு வராமல் இருப்பதற்கான காரணம் குறித்து பெற்றோரிடம் கேட்டறிந்து, மீண்டும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர். மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு, மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருக்கு நிமிர் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.
















