திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தச்சநல்லூா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர், மகேந்திர குமார் தலைமையில் காவலர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்