காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கூத்திரமேடு பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி ரேணுகா, (40), என்பவருக்கும் எதிர் வீட்டில் வசிப்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், 3ம் தேதி மாலை எதிர் வீட்டில் வசிக்கும் சசிகுமார், அவரது மனைவி சிலம்பரசி, சசிகுமார் பெற்றோர் மணி, தனபாக்கியம் ஆகியோர் ரேணுகாவை திட்டிஉள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் ரேணுகா வீட்டில், இருந்த மண்ணெண்யை தன் உடலில், ஊற்றி தீ வைத்துக்கொண்டார். செங்கல்பட்டு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில், கதிரேசன் புகார் அளித்தார். காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்
















