தென்காசி: தென்காசி மாவட்டம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பண மோசடி புகார் சம்பந்தமாக செங்கோட்டை காவல் நிலையத்திற்கு கோவில்பட்டியை சேர்ந்த ஜெயவேலன் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்த பின்னர் மேற்படி ஜெயசீலன் தானாகவே தலைமறைவாகி விட்டு அவரது மனைவி சௌக்கிய தேவியின் மூலமாக ஜெய வேலன் காணாமல் போனதாக காவல் துறையினரின் மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் (HCP 259/2020) ஆட்கொணர்வு மனுவை சமர்ப்பித்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் தனிப்படையினர் காணாமல் போனவரின் C.C.TV பதிவுகளையும், மற்றும் இதர வழக்கின் கோப்புகளையும் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் சமர்ப்பித்ததில், நீதிமன்றத்தில் மேற்படி நபர் தன்னைத்தானே மறைத்துக் கொண்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டது.
மேற்படி வழக்கில் பிரதிவாதிக்காக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் திரு.வெங்கட்ரமணன் (தென்காசி EX-MLA) அவர்கள் இந்த வழக்கில் காவல்துறையினரின் சீரிய பணியை பாராட்டியும், பொய் வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் உரிய வெகுமதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியதன் பேரில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் திரு. புகழேந்தி மற்றும் திரு.கல்யாண சுந்தரம் ஆகியோர் காவல்துறையினரின் துரித நடவடிக்கையை பாராட்டியும் பொய்யாக வழக்கு தொடுத்து காவல்துறையினரை அலைக்கழித்த ஜெயவேலன் மற்றும் அவரது மனைவி சௌக்கிய தேவி ஆகியோரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 1 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த இழப்பீடு தொகையானது ஜெயவேலன் என்பவரால் காவல்துறையினரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் வழக்கில் திறம்பட பணியாற்றிய செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.அரிஹரன் (தற்போது பேட்டை திருநெல்வேலி) திரு. ஷியாம் சுந்தர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. சண்முகநாதன், தலைமை காவலர்கள் திரு. சீவலமுத்து, திரு.அருள்,திரு.காளிதாஸ்,காவலர் திரு.முத்துக்குமார் ஆகியோரை நேரில் அழைத்து அவர்களுக்கு பண வெகுமதி வழங்கி, தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினருக்கு சாதகமாக தீர்ப்பு வருவது மிகவும் அரிதானது.தமிழக காவல்துறை வரலாற்றில் இதுபோன்ற அரிதான செயலை நிகழ்த்திக் காட்டிய தென்காசி மாவட்ட காவல் துறையினரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்..















