திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தென்னிமலையைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (38). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மேலும் இதற்கு அச்சிறுமியின் தாய் மல்க்காமல் (35). என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அச்சிறுமி நான்குனேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7.1/2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர் பிரேமா, (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) நாங்குநேரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன், ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N .சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்