செங்கல்பட்டு: நேற்று,(15-02-2022) இரவு சுமார் 9.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் பார்வைக்காக ஐ.டி.ஐ வளாகம் அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானம் வருகை புரிந்த இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் அலங்கார ஊர்தியை மாவட்ட ஆட்சியர் திரு.AR. ராகுல் நாத் IAS மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் மலர் தூவி வரவேற்றனர்… மேலும்,பொதுமக்கள் பார்வையிடுவதற்காக முன்னேற்பாடு மற்றும் ,பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்…
















