தேனி: தேனிமாவட்டம் (03.12.2019) பெரியகுளம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.விஜய்ஆனந்த் அவர்கள், இவரது துணிச்சல் மிகு நடவடிக்கையால் பெரியகுளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் களையப்பட்டு வருவதோடு, விபத்துக்கள் குறைந்து வருகின்றது.
பள்ளிக் குழந்தைகளை அதிக அளவில் ஷேர் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களை கண்டிப்புடன் எச்சரிக்கை செய்து வருகின்றார். இந்நிலையில் இன்று அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தி குழந்தைகளை இறக்கி, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வேறொரு ஆட்டோக்களில் செல்வதற்கு தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
இவரது செய்கை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதிக ஆட்களை ஏற்றி விபத்திற்கு வழிவகுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் இவரது நடவடிக்கையால் அதிக ஆட்கள், அதிக குழந்தைகள் ஏற்றுவதை தவிர்த்து வருகின்றனர். இப்பகுதியில் பணியாற்றத் தொடங்கிய சில நாட்களில் இவரது துணிச்சல் மிகு நடவடிக்கை கண்டு பொதுமக்கள், பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.















