பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் தலைமையில் 06.11.2021-ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர்
பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வயதான மூதாட்டியை பத்திரமாக மீட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, தலைமைக் காவலர் திருமதி.பார்வதி,
காவலர் திரு. ஸ்ரீதர் ஆகியோர் மேற்படி மூதாட்டிக்கு இரவு உணவு வழங்கியும் அவரது பசியினை போக்கி பின்னர் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
















