புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமானார். நீண்ட நாட்களாக தேடி வந்த நிலையில், மேற்படி நபர் ஆதரவற்ற நிலையில் நாகலாந்து மாநிலத்தில் இருப்பதாக மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நாகலாந்து காவல்துறையினர் மற்றும் நாகலாந்து தமிழ் சங்கம் உதவியோடு அவரை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையிலிருந்து அவரை பத்திரமாக தனிவாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜா, காவலர்கள் திரு.பிரபு, திரு.புஷ்பராஜ் மற்றும் திரு.தமிழ்செல்வம் ஆகியோர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அவரது கிராம மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.















