நெல்லை: நெல்லை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் திருட்டு தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவரமாக திருடர்களை வலைவீசி தேடினர்.மாநகர சைபர் கிரைம் போலீசாரின் தீவர தேடுதல் வேட்டையில் 38 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 43 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நெல்லை மாநகர போலீஸ் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) திரு.பிரவீன்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.











