சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் பளு தூக்கும் தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதியில் கொரானா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதை அடுத்து காவல்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர், அப்பகுதியில் வசிக்கும் எண்ணற்ற கூலித் தொழிலாளர்களுக்கு, முக கவசங்கள் வழங்கி கொரானா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா
















