திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் முதல் 2025 ஆம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக (08.09.2025) அன்று நடைபெற்ற கைப்பந்து (வாலிபால்) போட்டியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை உட்பட நான்கு அணிகள் கலந்து கொண்டன. போட்டி முடிவில் முதல்வர் கோப்பைக்காண வெற்றியை மாவட்ட காவல்துறை அணி பெற்று பெருமை சேர்த்துள்ளது. திருநெல்வேலி காவல்துறை அணியின் சார்பாக கேப்டன் சோபியா, (காவல் உதவி ஆய்வாளர்), ஜென்சி, (காவல் ஆய்வாளர்) , மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், சுவாதிகா, ராஜேஸ்வரி, சகாய ராபின் ஷாலு, பெண் காவலர்கள் அழகம்மாள், பேச்சியம்மாள், மேரி ராஜபுஷ்பம், ஜமிலா ஹேமசுதா, ஹெப்சிபா, முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்