திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலில் உள்ள கங்கை அம்மன் கோயில் தெருவில் சமுதாய பெரியவர்கள் பங்கேற்ற கூட்டம் (07.09.2025) அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ராமகிருஷ்ணனும் (66). கலந்து கொண்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் மகாராஜன் (35). இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வேகமாக வந்துள்ளார்.
இதனை ராமகிருஷ்ணன் கண்டித்த போது ஆவேசமடைந்த மகாராஜன் தகராறு செய்து கையில் வைத்திருந்த பெட்ரோலை ராமகிருஷ்ணன், மற்றும் சிலர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், ராமகிருஷ்ணனுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் பாப்பாக்குடி காவல் நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் சென்று தீக்காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மகாராஜன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்