தர்மபுரி : தர்மபுரி டவுன் காவல் துறையினர் , வெண்ணாம்பட்டி பகுதியில், வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தினர். காவல் துறையினரை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓட முயன்றார். காவல் துறையினர், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (35), என்பதும், மணல் கடத்தியதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஓட்டுநர் பிரபுவை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்

க.மோகன்தாஸ்.
















