திருச்சி : திருச்சி மாநகரத்தில் கடந்த (11.06.22)-ம்தேதி பொன்மலை, சோமசுந்தரம்நகர் அருகில் உள்ள சுடுகாடு அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் ஹேமசந்திரன் மற்றும் சதிஷ்குமார் ஆகியோர்களை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி ஹேமசந்திரன் என்பவர் மீது காந்திமார்க்கெட்டில் பகுதியில் பைனான்சியரை காரில் கடத்தி கொலை செய்த வழக்கும், குற்றவாளி சதிஷ்குமார் மீது பொன்மலை காவல்நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை கையால் தாக்கி பணத்தை பறித்து சென்றதாக வழக்கும், நிலுவையில் உள்ளது என தெரியவருகிறது. எனவே, குற்றவாளிகள் தொடர்ந்து கொலை குற்றங்களில், ஈடுபடுவதும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.















