திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வடுவூர் சரக பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க செல்லம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நள்ளிரவில் தவித்த நிலையில் இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமதி.பகவதி சரணம் (மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்) என்பவர் மூதாட்டியை மீட்டு அவரது உறவின ர்களிடம் ஒப்படைத்து மனித நேயத்துடன் செயல்பட்ட நிலையில் காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M துரை IPS., அவர்கள் பாராட்டினார்கள்.















