திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே, கொண்டமாநல்லுார், கிராமத்தில் வசித்தவர் அஜித், (25), நண்பர் மனோஜ்குமார், (23), நேற்று முன்தினம், இருவரும், ‘யமஹா எப்இசட்’ இருசக்கர வாகனத்தில், கும்மிடிப்பூண்டி நோக்கி சென்றனர். எளாவூர் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று, இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில், சம்பவ இடத்திலேயே அஜித் இறந்தார். பலத்த காயம் அடைந்து மனோஜ்குமார், சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பாக்கம் காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

















