கோவை : கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சி சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (65), இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் 25. உக்கடத்தை சேர்ந்த ஜெகன் என்பதும், இவர்கள் தான் தேவசகாயம் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
















