திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட காலமாக சரித்திர பதிவேடு (history sheet) உள்ள சுமார் 222 நபர்களை வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் நேரடியாக 04.01.2021 அன்று விசாரித்தார். குற்றவாளிகள் மீதான குற்றங்கள் குறித்தும், வழக்கின் போக்கு குறித்தும் கேட்டு அறிந்து வழக்கு நிலுவையில் இல்லாத தற்போது நன்னடத்தையுடன் உள்ள குற்றவாளிகளின் குற்ற பதிவேட்டை நீக்க பரிந்துரை செய்யுமாறு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பதிவு நீக்கம் செய்யப்பட்ட பிறகு மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார், உடன் இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K. முத்துக்குமார் அவர்கள், திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. துரைபாண்டியன் அவர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்












